சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாள். இந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் ஜெகதீஸ்வரன் என்கிற ஜெகதீஷ்(வயது 23), திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மதுரைக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமியை அவளது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் ஜெகதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.