கொள்ளிடம்:
கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கொள்ளிடம் பகுதியில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் கொள்ளிடம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பருத்தி சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.