சேலம் மாவட்டம் ேமட்டூரில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று பழனிக்கு புறப்பட்டது. இந்த லாாியை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கருப்பணன் (வயது 47) என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தார் வரதநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே அதிகாலை 3 மணி அளவில் சென்றபோது நிலைதடுமாறி ரோட்டோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் கருப்பணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் கருப்பணனை லாரியில் இருந்து மீட்டனர். பின்னர் மீட்பு வாகனம் மூலம் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.