கல்லூரி பஸ் மோதி பிளஸ்-1 மாணவர் பலி

உத்தமபாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி பிளஸ்-1 மாணவர் பலியானார்.

Update: 2022-05-16 16:04 GMT
உத்தமபாளையம்: 


கல்லூரி பஸ் 
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சந்துரு (வயது 16). உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டி அரசு உதவிப்பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
இவர், இன்று காலை உத்தமபாளையம்-கம்பம் புதிய பைபாஸ் சாலையில் நண்பர்களை பார்க்க நடந்து சென்றார். கோகிலாபுரம் விலக்கு என்னுமிடத்தில் சந்துரு சாலையை கடக்க முயன்றார். அப்போது சின்னமனூரில் இருந்து கம்பம் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. 

மாணவர் பலி
இதில் சந்துரு படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் படுகாயமடைந்த மாணவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சந்துரு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவரான கம்பத்தை சேர்ந்த கண்ணன் (45) என்பவரை கைது செய்தனர். தனியார் கல்லூரி பஸ் மோதி பிளஸ்-1 மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்