பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்
தாவணகெரே மாவட்டத்தில் திடகூரு கிராமத்தை சேர்ந்தபெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பெங்களூரு:
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா திடகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா(30). இவருக்கும், தாவணகெரே டவுன் எஸ்.எம்.கிருஷ்ணா நகரைச் சேர்ந்த தன்யாகுமார் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரிடம் கோபித்துக் கொண்டு திடகூரு கிராமத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு யசோதா சென்றுவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தன்யாகுமார், யசோதாவை சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் தனது கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி காந்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.