குன்னத்தூர் சந்தையில் ஒரு ஆடு ரூ40 ஆயிரத்துக்கு விற்பனை
குன்னத்தூர் சந்தையில் ஒரு ஆடு ரூ40 ஆயிரத்துக்கு விற்பனை
குன்னத்தூர்:
குன்னத்தூர் சந்தையானது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தையாகும். இப்பகுதியில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகமான ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மேலும் குன்னத்தூர் சந்தைக்கு சக்தி, அந்தியூர், கோபி, ஈரோடு, பவானி, மேட்டூர், மேச்சேரியில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். சந்தைக்கு கோபி பகுதியில் இருந்து வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று விற்பனைக்கு வந்திருந்தது. அத்தகைய கிடாய் ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனையானது.