திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை

Update: 2022-05-16 15:34 GMT
அனுப்பர்பாளையம்:
மாநில அளவிலான காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் இருந்து 5 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல் மற்றும் 3-ம் பரிசை பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திருப்பூர் காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சதுரங்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயந்தி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்