பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-16 15:07 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் விஷால் (வயது 15). இவர் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் கவனகுறைவாக இருந்து வந்ததால் அவரது பெற்றோர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் அவரை  நன்றாக படிக்குமாறு கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த மாதம் 28-ம்ஆம்தேதி வீட்டு பின்புறம் உள்ள தோட்டத்து மோட்டார் அறையில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமணையில் சேர்த்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு இறந்து போனார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்