மறக்குடி யூனியன் தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
மறக்குடி யூனியன் தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
சாத்தான்குளம்:
மறக்குடி யூனியன் தொடக்கப்பள்ளியில் ரூ.17.32 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கூடுதல் வகுப்பறை
படுக்கப்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மறக்குடி யூனியன் தொடக்கப் பள்ளியில் மறுசீரமைப்பு கூடுதல் திட்டத்தின்கீழ் ரூ17.32 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை வகித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார். மாவட்ட ஊராட்சித் தலைவர் (பொறுப்பு) செல்வக்குமார், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையர் ராஜேஷ்குமார் வரவேற்றார். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து படுக்கப்பத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய நிழற்குடை அமைக்கும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் பலர் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனையில் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 15 பெண்களுக்கு அமைச்சர் வெள்ளாடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், தென்திருப்பேரை நகரபஞ்சாயத்து தலைவர் மணிமேகலைஆனந்த், நகரசெயலாளர் முத்துவீரபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட 25 பெண் பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் 125 வெள்ளாடுகள் வழங்கினார்.
விழாவில், கால்நடை பராமரிப்பு துறை தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராஜன், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆண்டனி இக்னேசியஸ் சுரேஷ், எட்வின், சந்தோச முத்துக்குமார், பூதலிங்கம், கால்நடை உதவி டாக்டர்கள் பொன்ராஜ், ராகவி, சரண்யா, காயத்ரி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி
தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் உடன்குடி மெயின்பஜார் அண்ணா திடலில் நடந்தது, ஒன்றிய செயலாளரும் யூனியன் தலைவருமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத் தலைவிஹீமைரா ரமீஷ் பாத்திமாஅஸ்ஸாப் அலி, யூனியன் துணைத்தலைவர் மீராசிராசூதீன், பேரூராட்சி மன்ற நியமன குமுஉறுப்பினர் ஜான்பாஸ்கர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேருராட்சி மன்ற துணைத் தலைவர் மால்ராஜேஷ் வரவேற்று பேசினார். தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் போடிகாமராஜ், திருப்பூர் மனோகர்பாபு, ஜகாங்கீர், மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட நிர்வாகி ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.