தூத்துக்குடி அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-16 14:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ள அருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பரமு. இவருடைய மகன் கந்தவேல்சாமி (வயது 55). இவரை எப்போதும் வென்றான் போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இதே போன்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முஷ்டக்குறிச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் வாணி கருப்பசாமி (29) என்பவரை மாசார்பட்டி போலீசார் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கந்தவேல்சாமி, வாணிகருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

மேலும் செய்திகள்