சமுக்தியாம்பிகையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
சமுக்தியாம்பிகையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.