ஊட்டியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

ஊட்டியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

Update: 2022-05-16 13:27 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாத இறுதியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இதை வாங்கிய கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். நேற்று ஊட்டியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதேபோல் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 97 மனுக்கள் கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்