கூடலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம்

கூடலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு ஆலோசனை கூட்டம்

Update: 2022-05-16 13:26 GMT
கூடலூர்

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மண் வயல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீமதி ஊராட்சி தலைவர் சுனில் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரெஜி மேத்யூ, செயலாளர் சோனி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாணவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பொது இடங்களில் வீசக் கூடாது. அவற்றை முறையாக கடைகளுக்கு நேரில் வந்து சேகரித்து செல்லும் வகையில் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே கடைகளில் தினமும் சேரக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் வியாபாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை அனைவரும் கடைபிடிப்பதாக வியாபாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்