கயத்தாறு அருகே சிறுமி கடத்தல்: மினிபஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது

கயத்தாறு அருகே சிறுமியை கடத்தி சென்ற மினிபஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-05-16 13:04 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே 17 வயது சிறுமியை  கடத்தி சென்ற மின் பஸ் கண்டக்டரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மின் பஸ் கண்டக்டர்
கயத்தாறு அருகேயுள்ள தெற்குமயிலோடை கிராமத்தில் கீழத் தெருவில் வசித்து வருபவர் உடையார்சாமி. விவசாயி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 30). இவர் தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது பஸ்சில் கயத்தாறு மளிகை கடையில் பணிபுரிந்து வந்த 17 வயதுடைய வேலைக்கு சென்று வந்துள்ளார். 
சிறுமி கடத்தல்
அவருடன் நெருங்கி பழகிய கண்டக்டர்,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏமாற்றி இந்த சிறுமியை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாய் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார், சிறுமியையும், கடத்திசென்ற கண்டக்டரையும் தேடி வந்தனர்.
இதில் சிறுமி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் இருப்பதாகவும், அவருக்கு காக்க வலிப்பு வந்ததால் அவரை அநாதையாக விட்டு விட்டு கண்டக்டர்  தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
பல்லடம் விரைந்து சென்ற கயத்தாறு போலீசார் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் முத்து தலைமறைவாக இருந்த ராஜபாண்டியை பிடித்து,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதுசெய்தார்.

மேலும் செய்திகள்