அடுக்குமாடி கட்டிடத்தில் தீ

கட்டுமான பணிகள் நடந்து வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-16 12:49 GMT
கோப்பு படம்
மும்பை, 
தென்மும்பை காலா கோடா, எஸ்பிளனடே ஹவுஸ் எதிரில் அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர். 
இதேபோல தீ விபத்திற்கான காரணமும் உடனடியாக தெரியவரவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக தென்மும்பை பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்