மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ஒரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கல்லக்குடி, மே.17-
புள்ளம்பாடி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் மாரியம்மன், செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் பக்திகோஷமிட்டு வடம்பிடித்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைபட்டி, மால்வாய், கண்ணனூர், மேலரசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி வாணவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.