தூத்துக்குடியில் இந்து தேசியகட்சியினர் கைது

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து தேசிய கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-05-16 12:42 GMT
தூத்துக்குடி:
இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளரை கைது செய்யக் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தப்போவதாக இந்து தேசிய கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து போராட்டம் நடத்த முயன்ற அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்