விளாத்திகுளம் அருகே என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை

விளாத்திகுளம் அருகே என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-16 12:35 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே என்ஜினீயர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயர்
விளாத்திகுளம் அருகே உள்ள நடுக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பொன்னுச்சாமி ராஜா (வயது 22). டிப்ளமோ என்ஜினீயர். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் கல்வி படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். 
தற்கொலை
இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் நூல் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவலறிந்தவுடன் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று அவரது உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். எந்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்