மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல் உடைக்கும் தொழிலாளி சாவு

மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல் உடைக்கும் தொழிலாளி இறந்தார்.

Update: 2022-05-16 07:00 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளி புட்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது 45). கல் உடைக்கும் தொழிலாளி. இவா் மோட்டார் சைக்கிளில் சிவம்பட்டியை நோக்கி சென்றார். மாடறஅள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்