தளியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தளியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-16 07:00 GMT
தேன்கனிக்கோட்டை:
தளியில் மாந்தோப்பு ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முஜித்கான் தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்