முனியப்பன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை முனியப்பன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிபேட்டை மேல்தோப்பு ராமாயி, பொம்மாயி சமேத விரிஞ்சிபுரம் முனியப்பன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. சாமிக்கு பல்வேறு நறுமணப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.