லாரி டிரைவர் தற்கொலை

நல்லம்பள்ளி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-16 06:58 GMT
நல்லம்பள்ளி:
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 27). லாரி டிரைவரான இவர், மத்திய பிரதேசத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு பஞ்சு பேல் பாரம் ஏற்றிக் கொண்டு வந்தார். தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிநகர் பகுதியில் வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், லாரியை குறிஞ்சிநகர் பகுதியில் நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தகவல் அறிந்த மதன்ராஜ் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மதன்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மதன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்