நல்லம்பள்ளி:
தொப்பூர் சந்தரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). கல் உடைக்கும் தொழிலாளி. இவர், சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு தொப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நல்லூர் மாரியம்மன் கோவில் எதிரே வந்த போது அந்த வழியாக வந்த பஸ், முனுசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி சம்பவ இடத்தி்லேயே பலியானார். தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் விரைந்து வந்து முனுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.