போத்தாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை

போத்தாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2022-05-16 06:57 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் ஒன்றியம் எர்ரஅள்ளி ஊராட்சி போத்தாபுரம் கிராமத்தில்  ஒன்றியக்குழு உறுப்பினர் 15-வது நிதி குழு மானியத்தில் இருந்து ரூ.8.67 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில்  அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பையூர் பெ.ரவி, கிருஷ்ணன், மாவட்ட பால்வள தலைவர் குப்புசாமி, மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் வாசுதேவன், அண்ணாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், கூட்டுறவு சங்க தலைவர் முத்து, சின்னசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்