பர்கூரில் காளியம்மன் கோவில் திருவிழா
பர்கூரில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பர்கூர்:
பர்கூரில் உள்ள ஸ்ரீ மகா சாந்த காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி பவுர்ணமி நாளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கோவில் திருவிழா நடைபெற்றது. கணபதி, நவகிரக, சர்வ மங்கலம் நவராத்திரி ஹோமங்கள், அபிஷேகம், அம்மனுக்கு மகா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.