போலீஸ் நிலையத்தை தகர்ப்பதாக செல்போனில் பதிவு; வாலிபர் கைது
போலீஸ் நிலையத்தை தகர்ப்பதாக செல்போனில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சமயபுரம்:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளி விடை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சுரேஷ்(வயது 30). வீர முத்தரையர் முன்னேற்ற சங்க பிரமுகர். இந்நிலையில் ஒரு சம்பவம் தொடர்பாக அந்த சங்க பிரமுகர்கள் சிலரை ராம்ஜிநகர் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சுரேஷ் தனது செல்போனில், சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு சினிமா பாணியில் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தை தகர்க்கப்போவதாக பதிவு(ஸ்டேட்டஸ்) வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து சுரேசை நேற்று கைது செய்தார்.