வேணுகோபாலசுவாமி கோவிலில் வருடாபிஷேகம்
வேணுகோபாலசுவாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
தா.பேட்டை:
தா.பேட்டையில் ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகவேள்வி, பூஜைகள் நடத்தி சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.