வீடு புகுந்து பெண் கொலை

பெங்களூரு அருகே வீடு புகுந்து பெண் படுகொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-05-15 21:27 GMT
பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா வடகெரே கிராமத்தை சேர்ந்தவர் சன்னபசப்பா. இவரது மனைவி பாக்யஸ்ரீ (வயது 35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாக்யஸ்ரீக்கும், ரியாஸ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் ரியாசுக்கு, பாக்யஸ்ரீ பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை திரும்பதர ரியாஸ் மறுத்து விட்டார்.

 இதுதொடர்பாக பாக்யஸ்ரீக்கும், ரியாசுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை பாக்யஸ்ரீயின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், பாக்யஸ்ரீயை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்த தொட்டபள்ளாப்புரா போலீசார் பாக்யஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்யஸ்ரீயை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. பாக்யஸ்ரீயை, ரியாஸ் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்