திங்கள்சந்தை:
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் பரசேரி அருகே உள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் பிரேம் (வயது 21), சதீஷ் (26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.