நம்பியூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்; இன்று தொடங்குகிறது

நம்பியூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்களின் 2 நாட்கள் வேலை நிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Update: 2022-05-15 21:12 GMT
நம்பியூர்
நம்பியூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்களின் 2 நாட்கள் வேலை நிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 
10 ஆயிரத்துக்கும்   மேற்பட்ட...
நம்பியூர், கெடாரை, எம்மாம்பூண்டி, மலையப்பாளையம், அரசூர், வேட்டைகாரன் கோவில், கொளப்பலூர், கெட்டிச்செவியூர், கூடக்கரை, குருமந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பனியன் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இந்த நிறுவனங்களில் சுமார்     10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை  செய்து வருகிறார்கள். இந்த நிறுவனங்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து வரும் பனியன் துணிகளை கூலி அடிப்படையில் பெற்று பனியன் ஆயத்த ஆடை மற்றும் உள்ளாடைகளாக உற்பத்தி செய்து கொடுக்கிறது. 
2 நாட்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து நம்பியூர் பகுதியில் பனியன் ஆயத்த ஆடை நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.  இதுகுறித்து பனியன் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருகிறது. விைலயேற்றம் காரணமாக இந்த நிறுவனங்களில் பனியன் ஆயத்த ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூரில் இருந்து பனியன் துணிகளை மொத்தமாக எடுத்து வரும் இதுபோன்ற நிறுவனங்கள் ஆயத்த ஆடைகளை தைக்க தையல் நூல் உள்ளிட்ட பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவும் தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. 
நூல் விலை உயர்வை    கண்டித்து...
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தான் பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நூல் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. எனவே நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் 2 நாட்களுக்கு நம்பியூர், கோபி பகுதியில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகின்றன,’ என்றனர். 

மேலும் செய்திகள்