கருங்கல்:
கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபன ராஜூ மற்றும் போலீசார் எட்டணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 3 வாலிபர்களை பிடித்து சோதனையிட்ட போது அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், கப்பியறை கூவரவிளையை சேர்ந்த டேவிட் ராம்தாஸ் மகன் ஹரி விக்னேஷ் (வயது20), கஞ்சிகுழியை சேர்ந்த சுந்தர் மகன் அபிஷேக் (20), சத்யராஜ் மகன் தினேஷ்குமார் (22) என்பதும், பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.3,750 ரொக்கம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.