மேட்டூர் உபரிநீர் திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் உபரிநீர் திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-15 20:52 GMT

மேட்டூர்:

மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்காக உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக மேட்டூரை அடுத்த திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மேற்பார்வை பொறியாளர் பிரகாசம், நிர்வாக பொறியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்