அரியலூர்,
இல்லதரசிகளின் சமையலறையில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. மேலும் வடமாநிலங்களில் வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு,கிடுவென உயா்ந்துள்ளது.
அரியலூரில் கடந்த வாரம் மார்க்கெட், உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி, தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் 100-ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வினால் கவலையில் உள்ள இல்லத்தரசிகள், தற்போது தக்காளி விலை உயர்வினால் மிகுந்த கவலையில் உள்ளனர்.