அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

சிவகாசியில் நடைபெற்ற அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-05-15 20:34 GMT
சிவகாசி, 
சிவகாசியில் நடைபெற்ற அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
அய்யப்பன் கோவில் 
சிவகாசி அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அய்யப்பன் காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
13-ந்தேதி காலை 9 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.
நெய்குடம் ஊர்வலம் 
 தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு பால்குடம், நெய்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். 8 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.36 மணிக்கு புனிதநீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 11.31 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 அதனை தொடர்ந்து 12 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ அய்யப்பன் சங்க நிர்வாகிகள், நிர்வாகிகள் மற்றும் சபரிமலை யாத்திரை பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்