வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடந்தது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்வி குழும தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் முன்னிலை வகித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் கணேஷ்குமார் வரவேற்று பேசினார்.
சென்னை ஜிஸ்பேஸியஸ் டெக்னாலஜி நிறுவன பணியிடங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். நிறுவன மனிதவளத்துறை அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் இறுதியாண்டு சிவில் துறை மாணவர்கள் 24 பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன்சுவிதா மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், அலுவலர்கள் செய்து இருந்தனர்.