ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
பாவூர்சத்திரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம்:
மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் பாவூர்சத்திரம் அருகே
வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோடு ஆட்டோவில் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்திய பாவூர்சத்திரம் எழில் நகரைச் சேர்ந்த செல்வம் (வயது 47) என்பவரை கைது செய்து அரிசியையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.