ரூ.16 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம்; இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
அம்பை அருகே நெல் கொள்முதல் நிலையத்துக்கு ரூ.16 லட்சத்தில் நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
அம்பை:
அம்பை அருகே மன்னார்கோவில் வெயிலான் தெரு பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு நிரந்தர கட்டிடம் இல்லாததால், நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்படுவதால், மழையில் நனைந்து வீணாவதாக, விவசாயிகள் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் மற்றும் மேற்கூரைகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜயபாலாஜி, சேரன்மாதேவி மாரிச்செல்வம், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.