திருப்பனந்தாள்:
ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன் 219- வது பிறந்த நாள் விழா நேற்று அணைக்கரை கீழணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் செயலாளர் அன்பழகன், பொருளாளர் லெட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதல் விவசாயிகள், பொறியாளர்கள் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ஆர்தர் காட்டன் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகமாக வெளியிட்டு சிறப்பிக்கவேண்டும். தமிழக அரசு திருச்சி முக்கொம்பு, கல்லணை ஆகிய பகுதியில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உருவப்படத்தை விவசாயிகள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.