ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மருத்துவமனை மற்றும் சென்னை ஏ.வி.எஸ். கார்டியாக் சென்டர் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை வேலுமாணிக்கம் கதிரேசன் தொடங்கி வைத்தார். இதய நோய் நிபுணர் சஞ்சீவ், நரம்பியல் நிபுணர் சங்கநிதி, பாத சிகிச்சை நிபுணர் ராஜீவ், அறுவை சிகிச்சை நிபுணர் சுயம்புலிங்கம், பொது மருத்துவர் பிரியங்கா ஆகியோர் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பிரதீவ் செய்திருந்தார்.