குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை

குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-15 19:36 GMT
தொண்டி, 
குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அலங்கார கற்கள் சாலை
தொண்டி பேரூராட்சி 5-வது வார்டில் காவல்காரர் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் மிகவும் சிறியதாகவும் சுத்தம் செய்வதற்கு இயலாத நிலையில் இருந்து வருகிறது. இதனை பெரிய கழிவுநீர் வாய்க்காலாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் காவல்காரர் தெருவில் ஒரு பகுதியில் சாலை வசதி இல்லாமல் இருப்பதால் அந்த தெருவில், தரகன்தெருவிலும் அலங்கார கற்கள் சாலை அமைத்து தரவேண்டும். 
பள்ளி வாசல் கிழக்கு தெருவில் உள்ள சாலை வசதி இல்லாத 3 சந்துபாதைகளில் அலங்கார கற்கள் சாலை அமைத்து தரவேண்டும். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாட்டாமை காரத்தெரு, முகமது அபுபக்கர், ஸ்ரீரங்கம் படையாட்சி தெரு பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறுவதில்லை. 
நடவடிக்கை
எனவே அந்த பகுதியில் புதிதாக பம்பிங் ஸ்டேஷன் அமைத்து குடிநீர் பிரச்சினையை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை வேண்டும். பள்ளிவாசல் தெருவில் தற்போது அமைக்கப்பட்டு உள்ள சாலைகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டு உள்ளதால் அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மிகவும் பள்ள மாகவும் வாய்க் காலுக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதிகள் மிகவும் பள்ளமாக இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள், குழந்தைகள் வாய்க்காலில் விழுந்து பாதிப்படைந்து வருகின்றனர். 
இதேபோல் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகளின் இருபுறமும் அலங்கார கற்கள் சாலை அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி கவுன்சிலர் தொண்டீஸ்வரன் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உதவி இயக்குனர் பேரூராட்சிகள், மாவட்ட நிர்வாகத்திற்கும்  கோரிக்கை விடுத்து மனுஅனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்