ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொலை
கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடப்பிரச்சினை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை உடையார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி மகன் ஜெகன், அவரது தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா ஆகிய மூவருக்கும் இடப்பிரச்சினை உள்ளது.
இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்த்து சேகரை கீழே தள்ளிவிட்டனர்.
பரிதாப சாவு
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாச்சியார்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி சேகரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் ஜெகன், கலியபெருமாள், மோகனா ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கலியபெருமாள், ஜெகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.