வெள்ளரிக்காய் விவசாயம் தீவிரம்

கோடை மழையால் ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் வெள்ளரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-15 19:28 GMT
ராமநாதபுரம், 
கோடை மழையால் ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் வெள்ளரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆர்வம்
தமிழகம் முழுவதும் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத் திரம் தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி நடந்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெயில் சீசன் நடந்து வருவதால் மக்கள் வெள்ளரி பிஞ்சு, இளநீர், நுங்கு, பதநீர் மற்றும் பழ ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்து வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை கால சீசன் நடந்து வருவதால் ஆர்.எஸ்.மடை, பால்கரை, சக்கரக் கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களிலும் வெள்ளரி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளரி காய் சீசனையொட்டி ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான சாயல்குடி செல்லும் சாலையான ஆர்.எஸ்.மடை பகுதியில் சாலையோரத்தில் இரு புறமும் கையில் குடை பிடித்தபடி அமர்ந்து ஏராளமான பெண்கள் வெள்ளரி பிஞ்சு காய்களை விற்பனை செய்து வருகின்றனர். 
விவசாயம்
10 பிஞ்சுகள் உள்ள ‌ஒரு குவியல் ரூ.20-க்கு விற்பனை செய்து வருகின்றனர். வெள்ளரி பிஞ்சுகளை அந்த வழியாக வாக னங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு செல்கின் றனர்.
இது பற்றி ஆர்.எஸ்.மடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியசாமி கூறியதாவது:- ஆண்டுதோறும் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் வெள்ளரிப்பிஞ்சு சீசன் இருக்கும். ஆர்.எஸ்.மடை, பால்கரை கிராமங்களில் வெள்ளரி விவசாயம் அதிகமாக நடைபெறும். 
கோடை மழை
இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கடந்த சில வாரங்களில் பெய்த கோடை மழையால் வெள்ளரி செடிகளை சுற்றி ஏராளமான களை புல்செடிகள் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அதனால் களையை வெட்டி அகற்றி வருகிறோம். இன்னும் 3 மாதம் சீசன் உள்ளதால் வெள்ளரிப்பிஞ்சு விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்