வேனில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசி பறிமுதல்

நெல்லையில் வேனில் கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-05-15 19:17 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் பாளையங்கோட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்திய திம்மராஜபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பவரை கைது செய்து அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்