புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி வைபவ பூஜை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி வைபவ பூஜை நடைபெற்றது.

Update: 2022-05-15 19:09 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் நரசிம்ம ஜெயந்தி வைபவ பூஜை நடைபெற்றது. நரசிம்மர், லட்சுமிநரசிம்மர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், நுங்கு மற்றும் பழங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4-வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். ஸ்ரீனிவாச சுந்தர்ராஜ் பாகவதர் பக்தி சொற்பழிவு தயாளன் தாமோதரன் நிலவை பழனியப்பன், ஹரிணி சிறுவர் சிறுமியர்களின் இசை கச்சேரியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவர் ராம்தாஸ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆன்மீக அன்பர் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இளநீர், நுங்கு மற்றும் பழங்கள் அருட்பிரசாதமாக வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்