திருப்புவனம் யூனியன் கானூர் கண்மாயில் தூர்வாரும் பணி
திருப்புவனம் யூனியன் கானூர் கண்மாயில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியன் கானூர் கண்மாயில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
ஆய்வு
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கானூர் கண்மாயில் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் பலப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்புவனம் யூனியனை சேர்ந்த கானூர் கிராமத்தில் உள்ள கண்மாய் 1,058 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய கண்மாய் ஆகும். இதன் மூலம் 2,806 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதன் அடிப்படையில் ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கண்மாயில் உள்ள 8 மடைகளில் 6 மடைகள் சேதமடைந்து உள்ளதற்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஒரு மடையின் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறப்படுகிறது.
புனரமைப்பு
கண்மாயை சுற்றி உள்ள 6,780 மீட்டர் நீளத்திற்கு கரை பலப்படுத்தும் பணியும், உபரி நீரை வெளியேற்றுவதற்காக உள்ள கழிகள் புனரமைப்பு பணியும் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
கானூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து 9.6 கிலோ மீட்டர் நீளம் உள்ள நீர் வரத்துக்கால்வாய் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் 28.21 மில்லியன் கனஅடி நீர் சேமிக்க முடியும். கண்மாயில் உள்ள கரைகள் 0.8 மீட்டர் முதல் 1.6 மீட்டர் உயரம் வரை உயர்த்திபலப்படுத்தப் படுகிறது. சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டு உள்ளன.
அறிவுரை
கண்மாயில் இருந்து பாசன வசதிக்காக திறந்துவிடப்படும் நீர் எளிதில் சென்றடையும் வகையில் வாய்க்கால்களை சீரமைக் கவும், கண்மாயில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளவும், தண்ணீர் வெளியேற்றும் மதகு களை சீரமைத்து புனரமைத்து பராமரிக்கவும், முழு கொள் ளளவு நீரை சேமித்து அனைத்து ஆயக்கட்டுப்பகுதி விவசா யிகள் பயனடையும் வகையிலும் பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவிப் பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.