ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் கொடுத்தால் ஐம்பது லட்சம் ரூபாய் பரிசு; சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு

ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் கொடுத்தால் ஐம்பது லட்சம் ரூபாய் பரிசு என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர்;

Update: 2022-05-15 18:54 GMT
சிவகங்கை, 
தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் கொலை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசூழலில் குற்றவாளிகளை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சிறப்பு பரிசு அளிக்கப்படும் என்று சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் போஸ்டரை ஒட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகள்