அகில இந்திய கூடைப்பந்து போட்டி

பெரியகுளத்தில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது.;

Update: 2022-05-15 18:45 GMT
பெரியகுளம்: 

பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 61-வது ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்  தொடங்கின. போட்டியில் சென்னை இந்தியன் வங்கி, ஐ.சி.எப், கேரள போலீஸ் அணி, ஓ.என்.ஜி.சி, இந்திய கப்பற்படை, விமானப்படை, கேரள மாநில மின் வாரியம் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், நெல்லை பி.ஏ.கே.கே. கூடைப்பந்து கழக அணியும் விளையாடியது. நெல்லை அணி 52-37 என்ற புள்ளிக்கணக்கில் பெரியகுளம் அணியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற போட்டியில் கும்பகோணம் ராமநாதன் நினைவு கூடைப்பந்து கழக அணியும், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி கழகம் (கிரீன்ஸ்) அணியும் விளையாடியது. இதில் கும்பகோணம் அணி 84-61 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்