பள்ளிபாளையம் அருகே மொபட்டுகள் மோதல்; மில் தொழிலாளி சாவு

பள்ளிபாளையம் அருகே மொபட்டுகள் மோதல்; மில் தொழிலாளி சாவு

Update: 2022-05-15 18:40 GMT
பள்ளிபாளையம்:
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் பள்ளிபாளையம் அருகே கருங்கல்பாளையத்தில் உள்ள அட்டை மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எஸ்.பி.பி. காலனி மேம்பாலத்தில் வந்தபோது, பின்னால் வெடியரசம்பாளையத்தை சேர்ந்த சர்வேஷ் (19) என்பவர் மொபட்டில் வந்தார். 
அந்த சமயம் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த முருகன் ஸ்கூட்டர் மீது சர்வேஷ் ஓட்டி சென்ற மொபட் மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சர்வேசை பள்ளிபாளையம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்