பனங்காட்டில் துணிப்பை விழிப்புணர்வு பாடல் வெளியீடு

தேனி அருகே பனங்காட்டில் துணிப்பை விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

Update: 2022-05-15 18:32 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் குழுவினர் பனை விதைகள் நடவு, மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்ற ஆணி பிடுங்கும் திருவிழா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர் குழுவின் சார்பில் துணிப்பை, மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த விழிப்புணர்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் உள்ள பனைமர காட்டில் நடந்தது. நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி கருப்பையா இந்த பாடலை வெளியிட்டார். சமீபத்தில் வெளியான 'புஷ்பா' என்ற திரைப்படத்தில் வெளியான ‘ஊ சொல்றியா' என்ற பாடலை டப்பிங் செய்து விழிப்புணர்வு வரிகளுடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்