சிறுவன் தொண்டையில் சிக்கிய நாணயம்
சிறுவன் தொண்டையில் சிக்கிய நாணயம் அகற்றப்பட்டது.
ராமநாதபுரம்,
மண்டபம் அகதிகள் முகாமிற்கு இலங்கையை சேர்ந்த நிதர்சன், அவரது மனைவி மேரி ஜிட்சேனா, மகன் நியாஸ் (வயது6), 3 வயது மகள் ஆகியோருடன் வந்தனர். இவர்கள் தற்போது அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன் தினம் சிறுவன் நியாஸ் விளையாடியபடி ஒரு ரூபாய் நாணயத்தை வாயில் போட்டுள்ளான். திடீரென்று அந்த நாணயம் தொண்டைக்குள் இறங்கி சிக்கியது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து நாணயத்தை வெளியில் எடுத்தனர். இதன் பின்னர் சிறுவன் நியாஸ் மூச்சு திணறலில் இருந்து சரியாகி வீடு திரும்பினான்.